பாரத் பே நிறுவனத்தின் 2022-ம் நிதி ஆண்டின் வருவாய் 169% உயர்ந்து, 321 கோடியாக பதிவாகியுள்ளது. அதே வேளையில், நிறுவனத்தின் இழப்பு அதிகரித்து, 5594 கோடியாக பதிவாகியுள்ளது.
பாரத் பே நிறுவனத்தின் இயக்க இழப்பு 811 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய நிதி ஆண்டில், இது 277 கோடியாக பதிவாகி இருந்தது. நிறுவனத்தின் வருவாய் உயர்ந்ததற்கு, அதிக எண்ணிக்கையிலான கட்டணக் கருவிகள் மற்றும் கடன்களை வழங்கியதே காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது, மாதாந்திர அடிப்படையில் 1200 கோடி ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனைகளை நிறுவனம் மேற்கொள்கிறது. இதுவே, கடந்த நிதி ஆண்டில் 350 கோடி மதிப்பிலான மாதாந்திர பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.