ஏர்டெல் நிறுவனத்தின் குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணம் 155 ஆக உயர்வு

January 25, 2023

ஏர்டெல் நிறுவனம், கூடுதலாக ஏழு மண்டலங்களில் 99 ரூபாய்க்கான குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. முன்னதாக, ஒடிசா மற்றும் ஹரியானா பகுதிகளில் இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது, ஏர்டெல் நிறுவனத்தின் குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணம் 155 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கான வேலிடிட்டி 28 நாட்களாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், 1ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ் இந்தத் திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம் முதல், பார்தி ஏர்டெல் நிறுவனம், 99 […]

ஏர்டெல் நிறுவனம், கூடுதலாக ஏழு மண்டலங்களில் 99 ரூபாய்க்கான குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. முன்னதாக, ஒடிசா மற்றும் ஹரியானா பகுதிகளில் இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது, ஏர்டெல் நிறுவனத்தின் குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணம் 155 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கான வேலிடிட்டி 28 நாட்களாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், 1ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ் இந்தத் திட்டத்தில் கொடுக்கப்படுகிறது.

கடந்த நவம்பர் மாதம் முதல், பார்தி ஏர்டெல் நிறுவனம், 99 ரூபாய் குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டத்தை நிறுத்தம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால், இந்த திட்டத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 57% கூடுதலாக செலவுகள் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஏர்டெல் நிறுவனத்திற்கு, ஒரு வாடிக்கையாளர் மூலம் கிடைக்கும் சராசரி வருவாய் உயர்ந்துள்ளது. அதன் எதிரொலியாக, கடந்த சில மாதங்களாக ஏர்டெல் நிறுவனத்தின் வருவாய் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu