ஏர்டெல் நிறுவனத்தின் நான்காம் ஆண்டு நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஏர்டெல் நிறுவனத்தின் நிகர லாபம் 31% உயர்ந்து 2072 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஏர்டெல் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய், 4% உயர்ந்து 3759 கோடியாக சொல்லப்பட்டுள்ளது.
முந்தைய காலாண்டில், ஒரு வாடிக்கையாளர் மூலம் ஏர்டெல் நிறுவனத்திற்கு கிடைக்கும் சராசரி வருவாய் 193 ரூபாய் ஆக சொல்லப்பட்டது. இது கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் 209 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சாதகமான காலாண்டு அறிக்கையின் விளைவாக, இன்றைய வர்த்தகத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் பங்கு மதிப்பு கிட்டத்தட்ட 2% அளவுக்கு உயர்ந்து வர்த்தகமானது.