இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நேற்று தனது 2ம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டது. அதன்படி, கடந்த காலாண்டில், ஏர்டெல் நிறுவனத்தின் லாபத்தில் 38% இழப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், ஏர்டெல் நிறுவனத்தின் நிகர லாபம் 13.41 பில்லியன் ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் 21.45 பில்லியன் ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த முறை எதிர்பாராத இழப்பு நேரிட்டுள்ளதாகவும், இது தற்காலிகமான இழப்பு எனவும் கருதப்படுகிறது. ஏர்டெல் நிறுவனத்தின் வருவாய் 7.3% உயர்ந்து, 370.44 பில்லியன் ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் மொத்த செலவினங்கள் 3.5% உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் மொத்த 5ஜி பயனர்கள் எண்ணிக்கை 50 மில்லியனை கடந்துள்ளது. அதே வேளையில், ஏர்டெல் நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான ஜியோவின் பயனர் எண்ணிக்கை 70 மில்லியனை தாண்டி உள்ளது.