கடந்த சில தினங்களுக்கு முன் பார்தி ஹெக்ஸாகாம் லிமிடெட் நிறுவனத்தின் ஐபிஓ வெளியானது. இந்த நிலையில், இன்றைய வர்த்தக நாளில் கிட்டத்தட்ட 4% அளவுக்கு பார்தி ஹெக்ஸாகாம் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன. நிறுவனத்தின் 2 மூத்த அதிகாரிகள் வெளியேறியதே இதற்கான முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி முதல், பார்தி ஹெக்ஸாகாம் பங்குச்சந்தையில் வெளியானது. ஐ பி ஓ வெளியீட்டை விட 32.49% உயர்வாக, 755.2 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டது. அத்துடன், கடந்த வெள்ளிக்கிழமை, பார்தி ஹெக்ஸாகாம் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 813.3 ரூபாய் அளவுக்கு உயர்ந்தது. ஆனால், அதைத் தொடர்ந்து வெளியான செய்தி காரணமாக இன்றைய வர்த்தகத்தில் சரிவு காணப்பட்டது. சஞ்சீவ் குமார் மற்றும் சுரஜித் மந்தோல் ஆகிய 2 நிர்வாக குழு உறுப்பினர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறி உள்ளது இதற்கான முக்கிய காரணம் ஆகும்.