ஹவாய் காட்டுத்தீயை பெரிய பேரழிவு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் மவுயி தீவு உள்ளது. இங்கு பயங்கர காட்டுத் தீ பரவியது. அங்கு பிரபல சுற்றுலா நகரமான லஹைனா பகுதியில் காட்டுத் தீ பரவியது. இதனால் அங்கு சுமார் 12,000 பேர் வீடுகளில் இருந்து வெளியேறினர். பாதுகாப்பு படையினர் அவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர்.இந்த காட்டுத்தீயில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 53 ஆக உயர்ந்துள்ளது.
இந்த காட்டுத்தீயில் ஏராளமான வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் எரிந்து சாம்பலாகி உள்ளது. மவுய் தீவில் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டு செல்போன் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹவாய் காட்டுத்தீயை பெரிய பேரழிவு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். மீட்புப் பணிகளுக்கு ராணுவத்தை அனுப்ப அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.