சமாபாலின சேர்க்கை தொடர்பாக தண்டனை பெற்ற ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடென் பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.
அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களுக்கு சம பாலின சேர்க்கை தொடர்பாக தண்டனை வழங்கப்பட்டு இருந்தது. அவர்களுக்கு 1951 ஆம் சட்டத்தின் கீழ் தண்டனை அளிக்கப்பட்டிருந்தது. பின்னர் 2013 ஆம் ஆண்டில் அந்த சட்டம் திருத்தி அமைக்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பிடென் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி முன்னாள் ராணுவ வீரர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.