அமெரிக்காவில் 1.2 பில்லியன் மதிப்பிலான மாணவர் கடன் தள்ளுபடி

February 22, 2024

ஜோ பிடென் அரசு 1,53,000 மாணவர்களின் கல்விக் கடனை தள்ளுபடி செய்துள்ளது. இந்த கடன் தொகை சுமார் 1.2 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மாணவர்கள் கடன் 1.73 ட்ரில்லியன் டாலர் அளவில் உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் மாணவர் கடன் தள்ளுபடி செய்யப்படுவது முக்கிய அம்சமாக இடம் பிடித்தது. அதிபர் ஜோ பிடென் சுமார் 430 பில்லியன் டாலர் மதிப்பிலான மாணவர் கடனை தள்ளுபடி செய்ய முயன்றபோது உச்ச நீதிமன்றம் […]

ஜோ பிடென் அரசு 1,53,000 மாணவர்களின் கல்விக் கடனை தள்ளுபடி செய்துள்ளது. இந்த கடன் தொகை சுமார் 1.2 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மாணவர்கள் கடன் 1.73 ட்ரில்லியன் டாலர் அளவில் உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் மாணவர் கடன் தள்ளுபடி செய்யப்படுவது முக்கிய அம்சமாக இடம் பிடித்தது. அதிபர் ஜோ பிடென் சுமார் 430 பில்லியன் டாலர் மதிப்பிலான மாணவர் கடனை தள்ளுபடி செய்ய முயன்றபோது உச்ச நீதிமன்றம் அதனை ரத்து செய்தது. இதனை அடுத்து அவர் மதிப்புமிக்க கல்விக்கு சேமிப்போம் என்ற திட்டத்தை கொண்டு வந்தார். இத்திட்டத்தில் 7.5 மில்லியன் பயனாளிகள் உள்ளனர். இன்று ஜோ பிடென் அரசு 1,53,000 மாணவர்களின் கல்விக் கடனை தள்ளுபடி செய்துள்ளது. இந்த கடன் தொகை சுமார் 1.2 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் கொண்டுவரப்பட்ட திட்டத்தில் பதிவு செய்தவர்கள் அனைவருக்கும் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இவர்கள் பன்னிரண்டாயிரம் டாலர்கள் அல்லது அதற்கும் கீழே கடன் பெற்று கடந்த 10 வருடங்களுக்கும் குறையாமல் தவணைகளை முறையாக செலுத்தி வருகின்ற மாணவர்கள் ஆவர்.

இது குறித்து பேசிய கல்வித்துறை செயலர், யாருக்கு அதிக தேவை உள்ளதோ அவர்களுக்கு கடன் நிவாரணம் வழங்கப்படுகிறது. மேலும் இப்பிரச்சனைக்கு அடிப்படை தீர்வு காண நாங்கள் முயற்சிக்கிறோம். கல்லூரி படிப்பிற்கான செலவு மிக அதிகமாகி வருகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்றார். பதவியேற்றதிலிருந்து இப்போது வரை 138 பில்லியன் மதிப்பிலான மாணவர் கடனை ரத்து செய்துள்ளார். இதன் மூலம் 3.9 மில்லியன் மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu