அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் சீனாவில் முக்கியமான உயர் தொழில்நுட்ப முதலீடுகளை தடை செய்யும் உத்தரவை வெளியிட்டார்.
இது இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளை மேலும் பாதிக்கும் என கூறப்படுகிறது. இது சார்ந்த விதிகள், அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக குறைக்கடத்திகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளை இந்த தடை குறிவைக்கிறது. இந்த திட்டமானது சீனாவில் உள்ள மேம்பட்ட குறைக்கடத்திகள் மற்றும் குவாண்டம் தகவல் தொழில்நுட்பங்களில் புதிய தனியார் சமபங்கு, துணிகர மூலதனம் மற்றும் கூட்டு முயற்சி முதலீடுகளை தடைசெய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இராணுவ நவீனமயமாக்கலுக்கு முக்கியமான தொழில்நுட்பங்களை உற்பத்தி செய்யும் திறனை அதிகரிக்க அமெரிக்க முதலீடுகளை சீனா பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கருதப்படுகிறது. இருந்தபோதும் பொது வர்த்தகப் பத்திரங்களில் சில அமெரிக்க முதலீடுகளுக்கு விதிவிலக்கு உருவாக்கப்படும் என்று தெரிகிறது.














