அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீது பதவி நீக்க விசாரணைக்கு பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குடும்பத்தினர் மீது தொழில் முறைகேடு குற்றச்சாட்டுகள் உள்ளன. இது தொடர்பாக அவருக்கு எதிரான பதவி நீக்க விசாரணையை மேற்கொள்ள நாடாளுமன்ற கீழவையான பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது. கீழவையில் எதிர்க்கட்சியான குடியரசு கட்சியினர் பெரும்பான்மை வகிக்கின்றனர். இந்த முடிவால் பைடன் பதவிக்கு ஆபத்து இல்லை. வரும் அதிபர் தேர்தலில் அவர் போட்டியிடுவது இதனால் பாதிக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது.