உக்ரைனுக்கு மேலும் ஆயுதங்களை வழங்க முடிவு - ஜோ பைடன்

July 11, 2024

அமெரிக்காவில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மேலும் ஆயுதங்களை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் மீது போர் தொடுத்து வருகிறது ரஷ்யா. நேட்டோ ராணுவ அமைப்பில் சேர உக்ரைன் முயற்சித்தது ரஷ்யாவின் கோபத்திற்கான காரணம். இந்த போரில் நேட்டோ உருப்பு நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் நிதி உதவி அளித்து வருகிறது. இதனால் அந்நாட்டு ராணுவத்தால் ரஷ்யாவை எதிர்த்து போரிட […]

அமெரிக்காவில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மேலும் ஆயுதங்களை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் மீது போர் தொடுத்து வருகிறது ரஷ்யா. நேட்டோ ராணுவ அமைப்பில் சேர உக்ரைன் முயற்சித்தது ரஷ்யாவின் கோபத்திற்கான காரணம். இந்த போரில் நேட்டோ உருப்பு நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் நிதி உதவி அளித்து வருகிறது. இதனால் அந்நாட்டு ராணுவத்தால் ரஷ்யாவை எதிர்த்து போரிட முடிகிறது. உறுப்பு நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்கள் வழங்குவதை ரஷ்யா கடுமையாக எதிர்க்கிறது. அதோடு நேட்டோவில் இணையும் திட்டத்தை உக்ரைன் கைவிட்டால் போரை நிறுத்த தயார் என்று புதின் அறிவித்துள்ளார். ஆனால் உக்ரைன் அதிபர் ஜலன்ஸ்கி இந்த கோரிக்கையை ஏற்கவில்லை. அவர் நிராகரித்துள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நேட்டோ அமைப்பின் உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், உக்ரைனுக்கு அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் மேலும் ஆயுத உதவி வழங்க முடிவு செய்துள்ளன. இதன் மூலம் போரில் உக்ரைன் முன்னோக்கி செல்வது உறுதி. இந்த போரில் ரஷ்யா தோல்வியடையும். இந்த போரில் மூன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் பலியாகி உள்ளனர். கிட்டதட்ட 10 லட்சம் ரஷ்யர்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறியுள்ளனர். இன்று நேட்டோ அமைப்பு பலமாக உள்ளது. இந்தப் போரில் உக்ரைன் வெற்றி பெறும், ரஷ்யா தோற்கும். உலக பாதுகாப்பின் அறனாக நேட்டோ உள்ளது என்றார். இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu