சீனாவுடன் மோதலை அமெரிக்கா விரும்பவில்லை, போட்டியை மட்டுமே விரும்புகிறது என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறினார்.
அமெரிக்கா மற்றும் சீனா இடையே தைவான் காரணமாக மோதல் போக்கு உள்ளது. இதனால் வர்த்தக ரீதியிலும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பேசுகையில், சீனாவுடன் அமெரிக்கா போட்டியை மட்டுமே விரும்புகிறது, மோதலை அல்ல. சீனாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறும் அளவில் அமெரிக்கா வலுவாக உள்ளது. சீனாவின் நியாயமற்ற பொருளாதார நடைமுறைக்கு எதிராக நாங்கள் இருக்கிறோம். தைவான் பகுதியில் அமைதி மற்றும் ஸ்திரத்தின்மைக்காக ஆதரவாக நிற்கிறோம். சீனா முன்னேறி வருகிறது, என்றும் அமெரிக்கா பின்தங்கி உள்ளது என்றும் சிலர் கூறுகிறார்கள். அது உண்மை அல்ல. அமெரிக்கா தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. உலகின் சிறந்த பொருளாதாரம் அமெரிக்காவில் உள்ளது என்று கூறினார்.