சீன அதிபர் ஜி ஜிங்பிங்கை சந்திக்க அமெரிக்க அதிபர் ஜோ பிடன் திட்டமிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின்போது இரு நாடு வர்த்தகம், தைவான். உக்ரைன் போர், வட கொரியாவின் ஆயுத பயிற்சி உள்ளிட்ட அனைத்து விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர் என்று கூறப்படுகிறது .
முன்பாக, அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி ஆகஸ்ட் மாதம் தைவானுக்கு விஜயம் செய்ததில் இருந்து தைவான் மீதான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. இந்த பயணத்தை சீனா விரும்பவில்லை. அதோடு தான் ஒரு பொருளாதார வல்லரசு ஆவதை அமெரிக்கா விருப்பவில்லை என்பதை உணர்கிறது. அதனாலேயே தனக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுப்பதாக நினைகிறது. அந்த வகையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது
இது, 2021 ஜனவரியில் பிடென் அதிபரான பிறகு, உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் தலைவர்களுக்கிடையே நடக்கும் முதல் சந்திப்பு ஆகும்.














