ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தினால், இஸ்ரேலை பாதுகாக்க முடியாது என்று அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது.
இதற்கிடையில், அமெரிக்காவுக்கு இன்று பயணம் செய்யவிருந்த இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலண்ட்டின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஈரானின் தாக்குதலுக்கு கடுமையாக பதிலளிக்க, அந்நாட்டின் எண்ணெய் ஆலைகள் மற்றும் அணுசக்தி தளங்களை தாக்கும் திட்டங்களை இஸ்ரேல் உருவாக்கி உள்ளது. அதற்கிடையில், இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டால், அமெரிக்கா அதற்கு உதவாது என்றும் பைடன் அரசு எச்சரித்துள்ளது. அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இன்று முக்கிய தொலைபேசி ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.














