ஜேபி மோர்கன் நிறுவனத்தின் உயர் மட்ட நிர்வாகிகள் பணி மாற்றம் - மாதவ் கல்யாணுக்கு சர்வதேச பதவி வழங்கப்பட்டுள்ளது

October 17, 2022

ஜேபி மோர்கன் நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகிகள் பொறுப்பிற்கு இந்தியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, ஜேபி மோர்கன் நிறுவனத்தின் இந்திய முதலீடுகள் மற்றும் வங்கிகள் துறை தலைவராக பொறுப்பு வகித்த கவுஸ்துப் குல்கர்னி, ஜேபி மோர்கன் நிறுவனத்தின் ஒட்டுமொத்த இந்தியச் செயல்பாடுகளுக்கான தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய செயல்பாடுகளுக்கான தலைவராக பொறுப்பு வகித்து வந்த மாதவ் கல்யாண், ஜேபி மோர்கன் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் மண்டலத்தின் தலைவராக பொறுப்பேற்க உள்ளார். ஏற்கனவே, ஆசிய பசிபிக் மண்டலத்தின் தலைமை பொறுப்பில் இருந்த ஸ்ரீதர் […]

ஜேபி மோர்கன் நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகிகள் பொறுப்பிற்கு இந்தியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, ஜேபி மோர்கன் நிறுவனத்தின் இந்திய முதலீடுகள் மற்றும் வங்கிகள் துறை தலைவராக பொறுப்பு வகித்த கவுஸ்துப் குல்கர்னி, ஜேபி மோர்கன் நிறுவனத்தின் ஒட்டுமொத்த இந்தியச் செயல்பாடுகளுக்கான தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய செயல்பாடுகளுக்கான தலைவராக பொறுப்பு வகித்து வந்த மாதவ் கல்யாண், ஜேபி மோர்கன் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் மண்டலத்தின் தலைவராக பொறுப்பேற்க உள்ளார். ஏற்கனவே, ஆசிய பசிபிக் மண்டலத்தின் தலைமை பொறுப்பில் இருந்த ஸ்ரீதர் கந்தடாய், சர்வதேச கட்டண துறையின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், பி டி சிங், ஜேபி மோர்கன் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மத்திய ரிசர்வ் வங்கி அவரது நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கும் வரையில், அவரே இடைக்கால தலைமை செயல் அதிகாரியாகவும் செயல்பட உள்ளார்.

ஜேபி மோர்கன் என்ற வங்கி நிறுவனம், இந்தியாவில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா திகழ்வதால், உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கடன்கள், இணைப்புகள், கையகப்படுத்துதல் நடவடிக்கைகள் போன்றவற்றில் கவனம் செலுத்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே, இந்திய முதலீடுகள் துறையில் பொறுப்பு வகித்த குல்கர்னி, தனது 24 வருட பணியின் மூலம், இந்திய முதலீடுகளை பெரிதும் அதிகரித்துள்ளார். மேலும், 30 வருடங்களாக நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஸ்ரீதர், நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவி உள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக பி டி சிங், ஜே பி மோர்கன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவர் மூலமாக பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஜே பி மோர்கன் நிறுவனத்துடன் வர்த்தகத்தில் இணைந்தன.

இந்திய முதலீட்டு வங்கி பிரிவின் தலைவராக நவீன் வாத்வானி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் பல்வேறு நிறுவனங்களின் இணைப்புகள் மற்றும் கையகப்படுத்துதலில் நிபுணத்துவம் வாய்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன், தெற்காசியா மண்டலத்தின் முதலீட்டு வங்கி பிரிவின் தலைவராக வினீத் மிஷ்ரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கும் முதலீட்டு வங்கி வர்த்தகத்தில் 20 ஆண்டுகள் அனுபவம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேற்குறிப்பிட்ட அனைத்து பணி மாற்றங்களும் நவம்பர் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று ஜேபி மோர்கன் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த பணி மாற்றங்களால் நிறுவனத்தின் வளர்ச்சி அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu