அனைத்து மாநிலத்தவரும் அரசு பள்ளி ஆசிரியராகலாம் - பீகாரில் முக்கிய சட்ட திருத்தம்

பீகார் மாநிலத்தில் புதிய சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவின் அனைத்து மாநிலத்தை சேர்ந்தவர்களும் பீகார் அரசு பள்ளிகளில் ஆசிரியராகலாம். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான அமைச்சரவை இந்த சட்ட திருத்தத்திற்கான ஒப்புதலை நேற்று வழங்கியுள்ளது. மேலும், இந்த சட்ட திருத்தத்தின்படி, அரசு ஊழியர்களுக்கு இணையாக, பள்ளி ஆசிரியர்களின் நியமனம் இருக்கும். பொதுவாக, பல்வேறு இந்திய மாநிலங்களில், அந்தந்த மாநிலங்களை சேர்ந்த நபர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அரசு […]

பீகார் மாநிலத்தில் புதிய சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவின் அனைத்து மாநிலத்தை சேர்ந்தவர்களும் பீகார் அரசு பள்ளிகளில் ஆசிரியராகலாம். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான அமைச்சரவை இந்த சட்ட திருத்தத்திற்கான ஒப்புதலை நேற்று வழங்கியுள்ளது. மேலும், இந்த சட்ட திருத்தத்தின்படி, அரசு ஊழியர்களுக்கு இணையாக, பள்ளி ஆசிரியர்களின் நியமனம் இருக்கும்.

பொதுவாக, பல்வேறு இந்திய மாநிலங்களில், அந்தந்த மாநிலங்களை சேர்ந்த நபர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அரசு வேலைக்கு விண்ணப்பித்தால், குறிப்பிட்ட மாநிலத்தில் வசிப்பதை உறுதி செய்யும் குடியிருப்பு சான்று கட்டாயமாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற விதி அமலில் உள்ளது. இந்நிலையில், இந்த 2 அம்சங்களையும் பிஹார் ரத்து செய்துள்ளது, இந்தியளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. அதே வேளையில், பீகார் மாநில ஆசிரியர் சங்கங்கள் இந்த சட்ட திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும், இது தொடர்பாக, மிகப்பெரிய போராட்டம் நடத்தவும் அவர்கள் திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu