ஹின்நெக்கன் (Heineken) மதுபான நிறுவனத்தின் 3.76% பங்குகளை பில் கேட்ஸ் வாங்கி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி, ஹின்நெக்கன் என்ற டச்சு மதுபான நிறுவனத்தின் பங்குகள் வாங்கப்பட்டதாக நெதர்லாந்தின் சந்தை மதிப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பங்கு விற்பனையில் மெக்சிகோவை சேர்ந்த FEMSA என்ற முகமை நிறுவனம் முக்கிய பங்காற்றியுள்ளது. இந்த நிறுவனத்திடம் இருந்து பில்கேட்ஸ் பங்குகளை வாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி, ஹின்நெக்கன் மதுபான நிறுவனம், சுமார் 18 மில்லியன் பங்குகளை விற்பனை செய்தது. இதில், பில் கேட்ஸ் 10.8 மில்லியன் பங்குகளை வாங்கி உள்ளார். சுமார் 883 மில்லியன் யூரோக்கள் மதிப்பில் இந்த பங்குகள் வாங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.