வாக்காளர் பட்டியலுடன் பிறப்பு, இறப்பு விவரங்களை இணைக்க சட்ட மசோதா - அமித்ஷா 

வாக்காளர் பட்டியலுடன் பிறப்பு, இறப்பு விவரங்களை இணைக்க சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்படும் என்று உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறுகையில், டிஜிட்டல் வடிவிலான, முழுமையான மற்றும் துல்லியமான மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்கள் பல்வேறு பயன்களை அளிக்கும். இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு, மேம்பாட்டுத் திட்டங்கள்ளை ஏழைகளை சென்றடைவதை உறுதி செய்யும். பிறப்பு, இறப்பு பதிவு விவரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைப்பதற்கான சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும். அதன்படி ஒருவருக்கு 18 வயதாகும்போது […]

வாக்காளர் பட்டியலுடன் பிறப்பு, இறப்பு விவரங்களை இணைக்க சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்படும் என்று உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறுகையில், டிஜிட்டல் வடிவிலான, முழுமையான மற்றும் துல்லியமான மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்கள் பல்வேறு பயன்களை அளிக்கும். இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு, மேம்பாட்டுத் திட்டங்கள்ளை ஏழைகளை சென்றடைவதை உறுதி செய்யும். பிறப்பு, இறப்பு பதிவு விவரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைப்பதற்கான சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும். அதன்படி ஒருவருக்கு 18 வயதாகும்போது தானாகவே அவர் பெயர் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட்டுவிடும். அதேபோல ஒருவர் இறக்கும்போது அவரின் பெயர் தானாகவே வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்கும் என்று அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu