உத்தர பிரதேசத்தில் 7-வது 'இயற்கை மற்றும் பறவைகள் திருவிழா' பிப்ரவரி 1-ந்தேதி தொடங்குகிறது.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மஹோபா மாவட்டத்தில், விஜய்சாகர் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு உத்தர பிரதேச மாநில அரசின் வனத்துறை மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நடத்தும் 7-வது 'இயற்கை மற்றும் பறவைகள் திருவிழா' நடைபெற உள்ளது. இந்த திருவிழா வரும் பிப்ரவரி 1-ந்தேதி தொடங்கி 3-ந்தேதி வரை நடைபெறும் எனவும், இதனை மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தொடங்கி வைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.