கொரோனா வைரஸை விட 100 மடங்கு மோசமான வகையில் பறவை காய்ச்சல் அபாயம் ஏற்பட உள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
பறவைக் காய்ச்சல் வைரஸ் கிருமியின் உருமாறிய வகையான எச் 5 என் 1 பாதிப்பு சில பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து சுகாதார நிபுணர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். அதில், இந்த வைரஸ் திரிபு, உலகளாவிய முறையில் பெருந்தொற்றாக மாறக்கூடும் என தெரியவந்துள்ளது. இந்த வகை பறவை காய்ச்சலால் அதிகமானோர் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். மேலும், “இது புதிதாக உருவாகும் வைரஸ் அல்ல; ஏற்கனவே பாலூட்டிகளின் உடலை தாக்கி பரவிக் கொண்டிருக்கும் வைரஸ்” என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் உயிரிழப்பு விகிதம் 0.1% என பதிவாகியுள்ள நிலையில், இந்த வகை பறவை காய்ச்சலால் 20% உயிரிழப்பு விகிதம் ஏற்படும் என அஞ்சப்படுகிறது.