ஆந்திர மாநிலத்தில் 100க்கும் மேற்பட்ட கோழிகள் பல்வேறு பகுதிகளில் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆந்திர மாநிலத்தில் உள்ள சில பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட கோழிகள் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தன. இதனை திருப்பதி மாவட்டம் போல் குளிக்காட்டி ஏரியிலிருந்து புலம்பெயர்ந்த பறவைகள் பரப்பி உள்ளதாகவும் இதனை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 721 குழுக்களும் நெல்லூர் மாவட்டத்தில் மட்டும் 37 குழுக்களும் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தோழிகள் இறந்த பகுதியை சுற்றியுள்ள 10 கிலோமீட்டர் சுற்றளவில் மூன்று நாட்களுக்கு சிக்கன் கடைகளை மூடவும் ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் 3 மாதங்களுக்கு சிக்கன் கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதைத்தவிர 15 நாட்களுக்கு கோழிகள் வெளியூர்களுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.