ஆந்திர மாநிலத்தில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் தற்போது வாட்ஸ்-அப் மூலம் வழங்கப்படவுள்ளன.
ஆந்திர மாநிலத்தில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் தற்போது வாட்ஸ்-அப் மூலம் வழங்கப்படவுள்ளன. இது குறித்து ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் விஜயானந்த் கூறியதாவது, "முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் உத்தரவின் படி, மாநில அரசு விரைவில் வாட்ஸ்-அப் நிர்வாக சேவையை வழங்க உள்ளது." இதன் மூலம், பொதுமக்கள் எளிதில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெற முடியும். இந்த புதிய முயற்சியை வெற்றிகரமாக செயல்படுத்த ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஒத்துழைப்பும் அவசியமாகும்.














