ஐக்கிய அரபு அமீரக சந்தையில் நுழைந்த பிஸ்லேரி

February 22, 2023

பிரபல மினரல் வாட்டர் நிறுவனமான பிஸ்லேரி, ஐக்கிய அரபு அமீரகத்தின் சந்தைக்குள் நுழைந்துள்ளது. அந்நாட்டில் செயல்பட்டு வரும் நாசர் அப்துல்லா லூட்டா குழுமத்துடன் இணைந்து, பிஸ்லேரி நிறுவனம் குடிநீர் வர்த்தகத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. குடிநீர் உற்பத்தி மற்றும் குடிநீர் பேக்கிங் ஆகியவற்றை நாசர் அப்துல்லா லூட்டா குடும்பத்தை சேர்ந்த எமிரேட்ஸ் டிரிங்கிங் வாட்டர் நிறுவனம் செயல்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வர்த்தக இணைப்பின் மூலம், துபாய், ஷார்ஜா, அபுதாபி உள்ளிட்ட பகுதிகளில் பிஸ்லேரி நிறுவனத்தின் […]

பிரபல மினரல் வாட்டர் நிறுவனமான பிஸ்லேரி, ஐக்கிய அரபு அமீரகத்தின் சந்தைக்குள் நுழைந்துள்ளது. அந்நாட்டில் செயல்பட்டு வரும் நாசர் அப்துல்லா லூட்டா குழுமத்துடன் இணைந்து, பிஸ்லேரி நிறுவனம் குடிநீர் வர்த்தகத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. குடிநீர் உற்பத்தி மற்றும் குடிநீர் பேக்கிங் ஆகியவற்றை நாசர் அப்துல்லா லூட்டா குடும்பத்தை சேர்ந்த எமிரேட்ஸ் டிரிங்கிங் வாட்டர் நிறுவனம் செயல்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வர்த்தக இணைப்பின் மூலம், துபாய், ஷார்ஜா, அபுதாபி உள்ளிட்ட பகுதிகளில் பிஸ்லேரி நிறுவனத்தின் வர்த்தகம் வலுவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய பிஸ்லேரி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஏஞ்சலோ ஜார்ஜ், “ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்கள் மத்தியில், பிஸ்லேரி மிகவும் பிரபலமான குடிநீர் நிறுவனமாக அறியப்படுகிறது. எனவே, எங்கள் சர்வதேச வர்த்தக விரிவாக்கத்திற்கு இது மிகவும் துணை புரியும்” என்று தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu