உலக அளவில் பிரபல கிரிப்டோகரன்சியாக இருக்கும் பிட்காயின், ஒரே மாதத்தில் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. கிட்டத்தட்ட 29000 டாலர்களுக்கு கீழ் பிட்காயின் மதிப்பு பதிவாகியுள்ளது.
2023 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் பிட்காயின் மதிப்பு உயர்ந்து வந்தது. கிட்டத்தட்ட 75% உயர்வை பிட்காயின் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், ஜூன் 21 ஆம் தேதிக்கு பிறகு, பிட்காயின் மதிப்பு 4.2% வரை சரிவடைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, அதன் மதிப்பு 28865 டாலர்களாக உள்ளது. பிட்காயின் தவிர இதர கிரிப்டோகரன்சிகளும் நேற்றைய தினம் சரிவை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.