நேற்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதில் அவர் காயமடைந்தார். இந்த சம்பவத்தின் எதிரொலியாக, இன்று பிட்காயின் உட்பட பல்வேறு கிரிப்டோ கரன்சிகள் உயர்ந்து வருகின்றன.
டொனால்ட் டிரம்ப் பிட்காயின் கிரிப்டோ கரன்சிக்கு ஆதரவாக உள்ளார். இந்த நிலையில், அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக அவரது வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக, பிட்காயின் மதிப்பு 60000 டாலர்களை தாண்டி உள்ளது. பிட்காயின் தவிர, டோஜ் காயின், சோலானா போன்ற கிரிப்டோ கரன்சிகளும் இன்று உயர்ந்துள்ளன. இன்றைய வர்த்தக நாளில் பிட்காயின் மதிப்பு 60160.71 டாலர்களாக உள்ளது.