அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு டிரம்ப் முன்னிலை பெறத் தொடங்கியவுடன், உலகின் பிரபலமான கிரிப்டோகரன்சி பிட்காயின் மதிப்பு உயரத் தொடங்கியது.
டிரம்பின் வெற்றி வாய்ப்பின் ஏற்றத்துடன், அவர் கிரிப்டோகரன்சிக்கு ஆதரவான நடவடிக்கைகளை எடுக்கக்கூடும் என்ற நம்பிக்கை அதிகரித்தது. இது முதலீட்டாளர்களின் கவனத்தை டிரம்ப் நிர்வாகம் மற்றும் கிரிப்டோ சந்தை மீதும் திருப்பியது. இதனால், தேர்தல் முடிவுகள் வெளியானபோது, பிட்காயின் மதிப்பு 75,000 டாலர் உச்சத்தை தொட்டு, டிரம்பின் வெற்றியுடன் கிரிப்டோ சந்தைகளுக்கு சாதகமான சூழல் உருவாகியது. இன்று, பிட்காயின் மதிப்பு புதிய உயரத்தை அடைந்து 89,637 டாலர்களாக உள்ளது.














