கடந்த வாரம் பிட்காயின் விலை 7% வீழ்ச்சியடைந்துள்ளது. இது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தேர்தல் வெற்றிக்கு பின் ஏற்பட்ட முதல் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியாகும். இதனால், எதர் மற்றும் டோஜ்காயின் உள்ளிட்ட பிற கிரிப்டோகரன்சிகளின் விலையும் 10% வரை குறைந்துள்ளது.
அமெரிக்க மத்திய வங்கியின் (Fed) திடீர் முடிவுகளே இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். Fed தனது வட்டி விகிதத்தை குறைத்தாலும், எதிர்காலத்தில் வட்டி விகிதத்தை உயர்த்தும் சாத்தியக்கூறு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், கிரிப்டோகரன்சிகளைப் பற்றிய நம்பிக்கை குறைந்துள்ளது. மேலும், டிரம்ப் அரசின் கிரிப்டோகரன்சிகளை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் சில மாற்றங்கள் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பும் முதலீட்டாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.