கிரிப்டோ கரன்சி சந்தையில், பிட்காயின் வரலாற்று உச்சத்தை நெருங்கும் நிலையில் உள்ளது. நிகழாண்டின் தொடக்கம் முதலே, பிட்காயின் கடும் உயர்வை பதிவு செய்து வருகிறது. கிட்டத்தட்ட 45% அளவுக்கு பிட்காயின் மதிப்பு இரு மாதங்களில் உயர்ந்துள்ளது. இந்த நிலையில், 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு, முதல் முறையாக, 60000 டாலர்கள் மதிப்பை பிட்காயின் தாண்டி உள்ளது. இது கிரிப்டோ கரன்சி முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் தொடங்கி, 6 பில்லியன் டாலர்களுக்கு மேலாக பிட்காயின் முதலீடுகள் பதிவாகியுள்ளன. கடந்த 2021 நவம்பரில், வரலாற்று உச்சமாக 69000 டாலர்கள் மதிப்பை பிட்காயின் பதிவு செய்தது. நேற்றைய வர்த்தக நாளின் இடையில், பிட்காயின் மதிப்பு 62539 டாலர்கள் அளவில் பதிவானது.அதன்படி, தொடர்ந்து உயர்ந்து வரும் பிட்காயின் மதிப்பு, விரைவில் அதன் வரலாற்று உச்சத்தை தாண்டும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.