பிட்காயின் மதிப்பு தொடர்ந்து வரலாற்று உச்சத்தில் நீடித்து வருகிறது. கிரிப்டோகரன்சி துறையில் அதிக முதலீடுகள் குவிந்து வருவதால் பிட்காயின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தை அடைந்துள்ளது.
நேற்றைய வர்த்தக நாளில், பிட்காயின் மதிப்பு 72881 அமெரிக்க டாலர்களாக பதிவானது. இதுவே, அதன் வரலாற்று உச்சபட்ச மதிப்பாகும். கடந்த வாரத்தில் மட்டுமே, கிட்டத்தட்ட 2.7 பில்லியன் டாலர்கள் அளவுக்கு பிட்காயின் முதலீடுகள் குவிந்தது. இதன் விளைவாக, பிட்காயின் வரலாற்று உச்சத்தை பதிவு செய்துள்ளது. பிட்காயின் மதிப்பு விரைவில் 80000 அமெரிக்க டாலர்களை எட்டும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.