நாசா, மனிதனால் இயக்கப்படும் ரோவர்களை தயாரிக்கும் போட்டி ஒன்றை அறிவித்திருந்தது. இந்த போட்டிக்கு இந்தியாவில் இருந்து 11 அணிகள் தேர்வாகி இருந்தன. தற்போது, பிட்ஸ் பிலானி மாணவர்களின் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாசா அறிவித்திருந்த போட்டியில், குறிப்பிட்ட காலத்திற்குள், மனிதனால் இயக்கப்படும் ரோவரை வடிவமைக்க வேண்டும். இது, நிலவு மற்றும் செவ்வாய் கிரகங்களில் மனிதர்கள் செல்லும் போது பயன்படுத்துவதற்கு துணை புரியும் என கூறப்பட்டிருந்தது. இந்தப் போட்டியில், பிட்ஸ் பிலானியின் Inspired Karters Gravity அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த அணி தயாரித்திருந்த G-Rover III, மற்ற அணிகள் தயாரித்த ரோவரை விட அதிநவீன அம்சங்களை கொண்டிருந்தது. குறிப்பாக, 3டி பிரிண்ட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.