பாராளுமன்றத் தேர்தலில் மற்றும் சட்டசபை தேர்தலில் பாஜக ஒடிசாவில் தனித்து போட்டியிடும் என கட்சியின் மாநில தலைவர் மன்மோகன் சமல் தெரிவித்துள்ளார்.
ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜக அரசு மத்தியில் மீண்டும் அமையும் எனவும் பிரதமராக மீண்டும் மோடி பதவியேற்பார் எனவும் பிஜு ஜனதா தள கட்சியின் ஆதரவு இன்றி பாஜக ஆட்சி அமைக்கும் எனவும் அந்நாட்டு முதல்வர் நவீன் பட் நாயக் தெரிவித்திருந்தார். இந்நிலையில் வரும் பாராளுமன்றத் தேர்தலில் 21 தொகுதிகள் மற்றும் சட்டம் சபை தேர்தலில் 147 தொகுதிகளிலும் பாஜக தனித்து போட்டியிடப்பட உள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் தெரிவித்துள்ளார்.














