சூரத் மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்.
குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியிடுவதாக மனு தாக்கல் செய்திருந்தார். இங்கு காங்கிரஸ் வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் உள்ளிட்ட எட்டு வேட்பாளர்களும் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். இதனால் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனை அடுத்து தேர்தல் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரி அவரிடம் வழங்கினார்.














