காங்கிரசை விட பாஜவுக்கு 6 மடங்கு அதிக நன்கொடை: தேர்தல் ஆணையம் 

December 1, 2022

ஆளும் பாஜக கடந்த நிதியாண்டில் காங்கிரஸ் கட்சியை காட்டிலும் 6 மடங்கு அதிகமாக தேர்தல் நன்கொடையை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பாஜ, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் சமீபத்தில் தேர்தல் ஆணையத்திடம் தாங்கள் பெற்ற நன்கொடை குறித்த விவரங்களை தாக்கல் செய்து இருந்தன. இதனை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. அதில், பாஜக கடந்த 2021-2022ம் ஆண்டில் மொத்தம் ரூ.614.53 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளது. இது காங்கிரஸ் பெற்றுள்ள நிதியைவிட […]

ஆளும் பாஜக கடந்த நிதியாண்டில் காங்கிரஸ் கட்சியை காட்டிலும் 6 மடங்கு அதிகமாக தேர்தல் நன்கொடையை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பாஜ, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் சமீபத்தில் தேர்தல் ஆணையத்திடம் தாங்கள் பெற்ற நன்கொடை குறித்த விவரங்களை தாக்கல் செய்து இருந்தன. இதனை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. அதில், பாஜக கடந்த 2021-2022ம் ஆண்டில் மொத்தம் ரூ.614.53 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளது. இது காங்கிரஸ் பெற்றுள்ள நிதியைவிட 6 மடங்கு கூடுதலாகும்.

காங்கிரஸ் கட்சி ரூ.95.46 கோடியை மட்டுமே நிதியாக பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.43 லட்சமும், கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.10.05 கோடியும், டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.44.54 கோடியும் நிதி பெற்றுள்ளதாக  அறிக்கை தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu