நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் 2024 ஆம் ஆண்டிற்காக பாஜக அரசு பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்காக தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் தொகுதி பங்கீடு கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை ஆகியவை மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாஜக கட்சி மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது அதில் பிரதமரின் இலவச சிலிண்டர் திட்டம், வீடுகள் மற்றும் குடிநீர் திட்டம், சந்திராயன் 3 விண்கலம் உள்ளிட்ட மோடி தலைமையிலான பல்வேறு சாதனைகள் பிரச்சாரங்களாக இடம் பெற்றுள்ளன.