டெல்லியில் முதல்வர் அதிஷி ராஜினாமா செய்துள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 27 ஆண்டுகளுக்குப் பிறகு பெரிய வெற்றியை பெறியுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையானதை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று, அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து பரபரப்பான ஆலோசனைகள் நடந்துள்ளன.
இந்த நிலையில், தோல்வியை ஏற்றுக் கொண்டு டெல்லி முதல்வர் அதிஷி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் இன்று தனது ராஜினாமா கடிதத்தை டெல்லி ஆளுநரிடம் ஒப்படைத்தார். பா.ஜ.க. 48 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், ஆம் ஆத்மி 22 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை.