ராஜஸ்தான் தேர்தல் - 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக

October 21, 2023

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. இதன்படி நவம்பர் 25 ஆம் தேதி ராஜஸ்தானில் தேர்தல் நடைபெறுகிறது. இதன் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் மூன்றாம் தேதி நடைபெறுகிறது. அறிவிப்பு வெளியான சில நேரங்களில் பாஜக அரசு மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது […]

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. இதன்படி நவம்பர் 25 ஆம் தேதி ராஜஸ்தானில் தேர்தல் நடைபெறுகிறது. இதன் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் மூன்றாம் தேதி நடைபெறுகிறது. அறிவிப்பு வெளியான சில நேரங்களில் பாஜக அரசு மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதன்படி ராஜஸ்தான் தேர்தலுக்கு முதல் கட்டமான 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. தற்போது 89 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu