திரிபுராவில் 2 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது.
திரிபுராவில் தன்பூர், போக்சா நகர் ஆகிய தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் இரண்டு தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. தன்பூர் தொகுதி ஏற்கனவே பா.ஜா.க வசம் இருந்தது. இங்கு பிரதிமா பௌவுமிக் மத்திய மந்திரி ஆனதால் மீண்டும் இடைத்தேர்தல் நடைபெற்றது.
இம்முறை இடைத்தேர்தலில் பிந்து டெப்நாத் பாஜாக சார்பில் போட்டியிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுசிக் சண்டாவை எதிர்த்து 30, 017 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மேலும் இந்த தொகுதியில் பழங்குடியினர் வகுப்பினைச் சேர்ந்த 18871 வாக்குகள் முக்கியமானதாக கருதப்பட்டு வருகிறது. யூஇதே போல் போக்சா நகர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிட்டி வேட்பாளர் மறைந்ததால் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பா.ஜா.க வேட்பாளர் டஃபாஜ்ஜால் ஹொசைன் கம்யூனிஸ்ட் க வேட்பாளர் மிஜன் கொசைனை எதிர்த்து 34146 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதில் 30,237 வாக்குகள் (சுமார் 67%) சிறுபான்மை வகுப்பை சேர்ந்தவர்கள் அதனால் இங்கு அவர்களது வாக்கு முக்கியமாக கருதப்பட்டது.














