கடந்த நவம்பர் 24 ஆம் தேதி, ‘கருப்பு வெள்ளி’ எனப்படும் ‘பிளாக் ஃப்ரைடே’ கொண்டாட்டங்கள் நிகழ்ந்தன.
பொதுவாக, அமெரிக்காவில், கருப்பு வெள்ளி முதல் புத்தாண்டு வரை, பொதுமக்கள் பல்வேறு பொருட்களை வாங்கி, பண்டிகை கால கொண்டாட்டங்களில் ஈடுபடுவர். ஆடைகள், புத்தகங்கள், அணிகலன்கள், மின்னணு சாதனங்கள் போன்ற பல பொருட்கள் இந்த காலகட்டத்தில் அதிகமாக விற்பனையாகும். எனவே, விழாக்கால சலுகைகளும் அறிவிக்கப்படும். அந்த வகையில், கடந்த கருப்பு வெள்ளி தினத்தன்று, 9.8 பில்லியன் டாலர்கள் மதிப்பில் இணையவழி வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக, ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் போன், டிவி போன்ற மின்னணு சாதனங்கள் அதிகமாக விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதிக தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டதாலேயே இந்த அளவில் விற்பனை உயர்வு பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதே வேளையில், கொரோனா பரவலுக்கு பிறகு, இந்த வருடம் மக்களின் நுகர்வு திறன் பொதுவாகவே உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.