சாத்தூரில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
சாத்தூர் அருகே உள்ள அப்பையநாயக்கன்பட்டியில் உள்ள சாய்நாத் பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை ஒரு மிகப்பெரிய வெடி விபத்து நடைபெற்றது. இந்த விபத்தால் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். வெடி விபத்தில் மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வேல்முருகன், நாகராஜ், கண்ணன், சிவக்குமார், காமராஜ், மீனாட்சிசுந்தரம் உடல் சிதறி உயிரிழந்தனர். அந்த இடத்தில் உள்ள பட்டாசுகளும் வெடித்து விபத்தை ஏற்படுத்தின. வெடிவிபத்தின் சத்தம் சில கிலோ மீட்டர் தொலைவுக்கு கேட்டது. விபத்து குறித்து தகவல் பெற்ற சாத்தூர் மற்றும் சிவகாசி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். இறந்த உடல்களை மீட்டி சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.