கதைகளில் வரும் ‘இன்விசிபிலிடி கிலோக்’ மந்திர ஆடையை வடிவமைத்து சீன மாணவர்கள் சாதனை

December 12, 2022

ஹாரி பாட்டர் கதைகளில், ‘இன்விசிபிலிடி கிலோக்’ எனப்படும் மந்திர ஆடை சொல்லப்பட்டு இருக்கும். இதனை அணிந்து கொண்டால், பிறர் கண்களுக்கு நாம் தெரிய மாட்டோம். இதே போன்ற ஆடையை சீன மாணவர்கள் வடிவமைத்து, கதையை உண்மையாக்கி சாதனை படைத்துள்ளனர். மேலும், இந்த ஆடையை சில நாட்களில் சந்தைப்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர். இது குறித்த செய்தியை சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்ற பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. InvisDefence என்று அழைக்கப்படும் இந்த ஆடை ஹுவாய் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிதி உதவியுடன் […]

ஹாரி பாட்டர் கதைகளில், ‘இன்விசிபிலிடி கிலோக்’ எனப்படும் மந்திர ஆடை சொல்லப்பட்டு இருக்கும். இதனை அணிந்து கொண்டால், பிறர் கண்களுக்கு நாம் தெரிய மாட்டோம். இதே போன்ற ஆடையை சீன மாணவர்கள் வடிவமைத்து, கதையை உண்மையாக்கி சாதனை படைத்துள்ளனர். மேலும், இந்த ஆடையை சில நாட்களில் சந்தைப்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர். இது குறித்த செய்தியை சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்ற பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. InvisDefence என்று அழைக்கப்படும் இந்த ஆடை ஹுவாய் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிதி உதவியுடன் வடிவமைக்கப்பட்டதாகும்.

பார்ப்பதற்கு சாதாரண உடை போலவே இருக்கும் இதனை அணிந்திருப்பவர்கள் கண்காணிப்பு கேமராக்களில் சிக்க மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது. இந்த ஆடை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கண்காணிக்கப்படுகிறது. இதனால், பகல் மற்றும் இரவு நேரங்களில், கண்காணிப்பு கேமராக்களில் மனித உருவங்களை கண்டறியும் திறனில் குழப்பம் ஏற்படுத்தப்படுகிறது. எனவே, கேமராக்களில் இருந்து மனித உருவம் மறைக்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu