ப்ளூ டார்ட்’ தளவாட நிறுவனம் ‘பாரத் டார்ட்’ என பெயர் மாற்றம்

September 13, 2023

‘ப்ளூ டார்ட்’ தளவாட நிறுவனம் தனது பெயரை ‘பாரத் டார்ட்’ என மாற்றி அமைத்துள்ளது. இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றுவதற்கு பெரும் சர்ச்சை நிகழ்ந்து வரும் சூழலில், இந்தப் பெயர் மாற்றம் கவனத்தை ஈர்த்துள்ளது.ப்ளூ டார்ட் நிறுவனத்தின் டார்ட் பிளஸ் சேவைகள் மட்டுமே பாரத் டார்ட் என மாற்றம் செய்யப்படுகிறது. நிறுவனத்தின் பெயர் மொத்தமும் பாரத் டார்ட் என மாற்றப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தளவாட சேவைகளில் பிரீமியம் ரக சேவை டார்ட் பிளஸ் என […]

‘ப்ளூ டார்ட்’ தளவாட நிறுவனம் தனது பெயரை ‘பாரத் டார்ட்’ என மாற்றி அமைத்துள்ளது. இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றுவதற்கு பெரும் சர்ச்சை நிகழ்ந்து வரும் சூழலில், இந்தப் பெயர் மாற்றம் கவனத்தை ஈர்த்துள்ளது.ப்ளூ டார்ட் நிறுவனத்தின் டார்ட் பிளஸ் சேவைகள் மட்டுமே பாரத் டார்ட் என மாற்றம் செய்யப்படுகிறது. நிறுவனத்தின் பெயர் மொத்தமும் பாரத் டார்ட் என மாற்றப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தளவாட சேவைகளில் பிரீமியம் ரக சேவை டார்ட் பிளஸ் என அழைக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், தேசத்தின் அனைத்து தேவைகளையும், உயர்தரத்தில் பூர்த்தி செய்யும் வகையில் இந்த பெயர் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், தற்போதைய நிலையில், இந்த பெயர் மிக முக்கிய கவனம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், ப்ளூ டார்ட் நிறுவனத்தின் பயணத்தில் இது முக்கிய மைல்கல்லாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu