சென்னை கடற்கரை பகுதிகளுக்கு 'நீலக்கொடி' தகுதி அளிக்கப்பட்டுள்ளது.
டென்மார்க் நாட்டின் சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை, உலகம் முழுவதும் கடற்கரைகளை ஆய்வு செய்து நீலக்கொடி கடற்கரை தகுதியை வழங்கி வருகிறது. நீலக்கொடி கடற்கரைகள் திட்டத்தின்படி, கடற்கரையை சுற்றியுள்ள பகுதிகள் பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் பாதுகாப்புடனும், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையிலும் அமைக்கப்படும். தற்போது இந்தியாவில் 10 நீலக்கொடி கடற்கரைகள் உள்ளன.
மெரினா முதல் சாந்தோம் கடற்கரை வரை பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்கள் உள்ளதால் பாரம்பரியம் சார்ந்த கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட உள்ளன. கடற்கரை பகுதியில் நடைபாதை, மிதிவண்டி தடம், விளையாட்டு பகுதி, படகுத்துறை, கண்காணிப்பு கோபுரம் ஆகியவை அமைக்கப்படும். மேலும் பாரம்பரிய தாவரங்கள் ஆய்வு திட்டமும் செயல்படுத்தப்படும். அதன் அடிப்படையில் மெரினா முதல் கோவளம் வரையான கடற்கரை பகுதி 'நீலக்கொடி' தகுதியை பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என சி.எம்.டி.ஏ. உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.