ப்ளூ ஒரிஜின் தனது 8 வது மனித விண்வெளிப் சுற்றுலாவான NS-26-ஐ வியாழக்கிழமை, ஆகஸ்ட் 29 அன்று மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. நியூ ஷெப்பர்ட் ராக்கெட்-கேப்ஸ்யூல் இணைப்பு, அமெரிக்க நேரப்படி காலை 9 மணிக்கு மேற்கு டெக்சாஸில் இருந்து விண்ணேற்றம் செய்யும். நிகழ்வின் நேரடி ஒளிபரப்பு காலை 8:20 மணிக்கு தொடங்கும்.
நிகழ்ச்சியில், நிகோலா எல்ரிக் மற்றும் கார்சன் கிட்சென் உள்ளிட்ட ஆறு பயணிகள் பங்கேற்பார்கள். வட கரோலினா பல்கலைக்கழகத்தின் 21 வயது மாணவியான கிட்சென், கார்மன் கோடு எனப்படும் விண்வெளியின் எல்லையைக் கடக்கும் மிக இளைய பெண்ணாக வரலாறு படைப்பார். இது ப்ளூ ஒரிஜினின் 26-வது நியூ ஷெப்பர்ட் விண்வெளிப் பயணமாகவும், 2024-ஆம் ஆண்டின் 2 வது மனித விண்வெளிப் பயணமாகவும் இருக்கும்.