வாட்ஸ்அப் செயலியில் ப்ளூடூத் ஃபைல் ஷேரிங் அம்சம் அறிமுகம்

January 22, 2024

வாட்ஸ்அப் செயலியில் ப்ளூடூத் ஃபைல் ஷேரிங் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் இது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில், பீட்டா பயனர்களுக்கு மட்டும் இந்த அம்சம் அறிமுகமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் மேம்படுத்தல் விவரங்களை வெளியிடும் WABetaInfo தளத்தில் இது குறித்த விரிவான விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அருகாமையில் இருக்கும் கைபேசி கருவிக்கு ப்ளூடூத் வழியாக ஃபைல் ஷேரிங் செய்யும் அம்சத்தை வாட்ஸ்அப் வெளியிட்டுள்ளது. இதில், 2ஜிபி வரையிலான பைல்களை அனுப்ப முடியும் என வாட்ஸ்அப் […]

வாட்ஸ்அப் செயலியில் ப்ளூடூத் ஃபைல் ஷேரிங் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் இது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில், பீட்டா பயனர்களுக்கு மட்டும் இந்த அம்சம் அறிமுகமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் மேம்படுத்தல் விவரங்களை வெளியிடும் WABetaInfo தளத்தில் இது குறித்த விரிவான விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

அருகாமையில் இருக்கும் கைபேசி கருவிக்கு ப்ளூடூத் வழியாக ஃபைல் ஷேரிங் செய்யும் அம்சத்தை வாட்ஸ்அப் வெளியிட்டுள்ளது. இதில், 2ஜிபி வரையிலான பைல்களை அனுப்ப முடியும் என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக, வாட்ஸ்அப் செயலியில் ‘ஷேர் பைல்ஸ்’ (Share Files) என்ற புதிய அம்சம் வெளியாக உள்ளது. கிட்டத்தட்ட ‘ஷேர் இட்’ செயலி போல இது செயல்படும் என கூறப்படுகிறது. இது வாட்ஸ்அப் பயனர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu