டிஸ்னி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த பாப் இகர், கடந்த ஆண்டு, பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவர் தலைமை பொறுப்பு வகிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
கடந்த 2020 பிப்ரவரி மாதத்தில் பாப் சேப்பக், டிஸ்னியின் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அப்போது தொடங்கி, நிறுவனத்தின் வளர்ச்சி பரவலாக உணரப்பட்டாலும், முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நிறுவனத்தின் சார்பில் இழப்புகளே பெரும்பாலும் பதிவு செய்யப்பட்டன. எனவே, டிஸ்னியின் நிர்வாகக் குழு, அடுத்த 2 ஆண்டுகளுக்கு பாப் இகரை தலைமைப் பொறுப்பில் அமர்த்த திட்டமிட்டுள்ளது. இதனை நிர்வாகக் குழு தலைவர் சூசன் அர்னால்ட் தெரிவித்தார். எனவே, தற்போதைய தலைவர் பாப் சேப்பக்குக்கு பதில், பாப் இகர் மீண்டும் தலைமை பொறுப்பில் அமர உள்ளது உறுதியாகி உள்ளது.














