மும்பை, ஏப்ரல் 28, 2022:
ரிலையன்ஸ் மற்றும் வயாகாம்18 நிறுவனங்கள், ஜேம்ஸ் முர்டோக்கின் லூபா சிஸ்டம்ஸ் மற்றும் உதய் ஷங்கர் ஆகியோரால் நடத்தப்பட்டு வரும் போதி ட்ரீ சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் இணையப் போவதாக அறிவித்துள்ளன. இதன் மூலம், இந்தியாவில் மாபெரும் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் நிறுவனங்களாக இந்த இணைப்பு நிறுவனங்கள் திகழும். இந்த இணைப்பிற்கு பின்னர், போதி ட்ரீ சிஸ்டம்ஸ் 13500 கோடி ரூபாயை, கலர்ஸ் டிவி, வூட் ஓடிடி தளம் உட்பட 38 சேனல்களை இயக்கும் வயாகாம்18 இல் முதலீடு செய்ய உள்ளது. இந்தப் புதிய கூட்டணி குறித்து பேசிய ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, “ஜேம்ஸ் மற்றும் உதய்யின் சாதனைகள் ஒப்பிட முடியாதவை. இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இந்தியா, ஆசியா மற்றும் உலகெங்கிலும் உள்ள ஊடகச் சூழலை வடிவமைப்பதில் அவர்கள் முக்கிய பங்கு வகித்தனர்” என்றார். மேலும், “போதி ட்ரீ உடனான இணைப்பு மூலம் ஸ்ட்ரீமிங்-முதல் மீடியா சந்தைக்கு இந்தியாவை மாற்றுவதற்கு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த இணைப்பின் மூலம் இந்திய வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த ஊடகம் மற்றும் பொழுதுபோக்குச் சேவைகளை வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்” என்று கூறினார்.