கடந்த 2022 ஆம் ஆண்டில், போயிங் நிறுவனம் அதிகபட்ச விமான ஆர்டர்களை வென்று சாதனை படைத்துள்ளது. குறிப்பாக, 2018ம் ஆண்டுக்குப் பின்னர், ஆர்டர் எண்ணிக்கையில் உச்ச வரம்பு எட்டப்பட்டுள்ளது.
யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம், போயிங் நிறுவனத்தில் அதிக விமானங்களை ஆர்டர் செய்த நிறுவனமாக முதலிடம் பிடித்துள்ளது. 737 மேக்ஸ் மற்றும் அதைவிட பெரிய ரக விமானம், ஏசில் 787 ஆகிய விமானங்களை இந்த நிறுவனம் ஆர்டர் செய்துள்ளது. மேலும், பேங்க் ஆப் சைனா ஏவியேஷன் நிறுவனம் 40 மேக்ஸ் ஜெட் விமான ஆர்டர்களை பதிவு செய்துள்ளது.
கடந்த 2022 ல், மொத்தமாக, 774 விமான ஆர்டர்கள் போயிங் நிறுவனத்தில் பதிவாகியுள்ளன. இது 2021 ம் ஆண்டை விட 479 எண்ணிக்கை கூடுதலாகும். கடந்த டிசம்பர் மாதத்தில், போயிங் நிறுவனம் 69 விமானங்களை கட்டமைத்து விநியோகித்துள்ளது. அவற்றில் 53 விமானங்க மேக்ஸ் ரக விமானங்கள் ஆகும். மேலும், 2022 ஆம் ஆண்டில், மொத்தமாக, 480 விமானங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.