விண்வெளிக்கு சுனிதா வில்லியம்ஸ் 3-வது முறை பயணம்

அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மூன்றாவது முறையாக நேற்று விண்வெளிக்கு சென்றார். தனியார் நிறுவனமான போயிங் உருவாக்கிய ஸ்டார்லைனர் விண்வெளி ஓடத்தில் மற்றொரு நாசா விண்வெளி வீரர் வில்மோருடன் அவர் சென்றுள்ளார். இதன் மூலம் ஸ்டார்லைனர் விண்வெளி ஓடத்தின் மூலம் விண்வெளி சென்ற முதல் குழு என்ற பெயரை இவர்கள் இருவரும் பெற்றுள்ளனர். அந்த விண்வெளி ஓடத்தின் சோதனை ஓட்டம் கடந்த மாதம் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. அதை ஏந்தி செல்லும் அட்லாஸ் ராக்கெட்டின் ஆக்ஸிஜன் […]

அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மூன்றாவது முறையாக நேற்று விண்வெளிக்கு சென்றார்.

தனியார் நிறுவனமான போயிங் உருவாக்கிய ஸ்டார்லைனர் விண்வெளி ஓடத்தில் மற்றொரு நாசா விண்வெளி வீரர் வில்மோருடன் அவர் சென்றுள்ளார். இதன் மூலம் ஸ்டார்லைனர் விண்வெளி ஓடத்தின் மூலம் விண்வெளி சென்ற முதல் குழு என்ற பெயரை இவர்கள் இருவரும் பெற்றுள்ளனர். அந்த விண்வெளி ஓடத்தின் சோதனை ஓட்டம் கடந்த மாதம் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. அதை ஏந்தி செல்லும் அட்லாஸ் ராக்கெட்டின் ஆக்ஸிஜன் வால்வு கோளாறு காரணமாக அந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், கோளாறு சரி செய்யப்பட்டதால் ஸ்டார்லைனர் விண்வெளி ஓடம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ஓடத்தை சுனிதா வில்லியம்ஸ் இயக்குகிறார். அவர் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைய 25 மணி நேரம் ஆகும். அவர் அங்கு சுமார் ஒரு வாரம் தங்கி ஆய்வு மேற்கொண்டு ஜூலை 14ஆம் தேதி பூமிக்கு திரும்புகிறார். இந்த சோதனை வெற்றி அடைந்தால் ஸ்பேஸ் எக்ஸ்க்கு அடுத்தபடியாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஆட்களை அனுப்பக்கூடிய இரண்டாவது தனியார் நிறுவனம் என்ற பெருமையை போயிங் நிறுவனம் பெறும் என்பது குறிப்பிட தகுந்தது. சுனிதா வில்லியம்ஸ் இந்திய வம்சாவிளியை சேர்ந்தவராவார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu