பொலிவியாவில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்ட ராணுவ தளபதி கைது

June 28, 2024

பொலிவியாவில் ராணுவ தளபதி ஜுவான் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டதால் போலீசார் கைது செய்தனர். தென் அமெரிக்கா நாடு பொலிவியா. இங்கு அதிபராக லூயிஸ் ஆர்ஸ் உள்ளார். ராணுவ தளபதியாக ஜுவான் ஜோஸ் ஜோனிகா உள்ளார். அவர் திடீரென்று ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவருடைய உத்தரவின் பேரில் ராணுவத்தின் ஒரு பகுதியினர் புரட்சி செய்ய முயன்றனர். பாராளுமன்றம் மற்றும் அதிபர் மாளிகை உள்ளிட்ட இடங்களில் ராணுவ வீரர்கள், டாங்கிகள் குவிக்கப்பட்டன. இதில் டாங்கி மூலம் அதிபர் […]

பொலிவியாவில் ராணுவ தளபதி ஜுவான் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டதால் போலீசார் கைது செய்தனர்.

தென் அமெரிக்கா நாடு பொலிவியா. இங்கு அதிபராக லூயிஸ் ஆர்ஸ் உள்ளார். ராணுவ தளபதியாக ஜுவான் ஜோஸ் ஜோனிகா உள்ளார். அவர் திடீரென்று ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவருடைய உத்தரவின் பேரில் ராணுவத்தின் ஒரு பகுதியினர் புரட்சி செய்ய முயன்றனர். பாராளுமன்றம் மற்றும் அதிபர் மாளிகை உள்ளிட்ட இடங்களில் ராணுவ வீரர்கள், டாங்கிகள் குவிக்கப்பட்டன. இதில் டாங்கி மூலம் அதிபர் மாளிகையின் கதவை உடைக்க முயன்றனர். பிற அரசு கட்டிடங்களும் முற்றுகையிடப்பட்டன. இதனால் பதற்றம் நிலவியது.

இது தொடர்பாக ராணுவ தளபதி ஜுவான் கூறுகையில், ஜனநாயகத்தை ஆயுதப்படைகள் மறு சீரமைக்க விரும்புகின்றன. நாட்டை மீட்டெடுக்க போகிறோம். சிறையில் உள்ள முன்னாள் தலைவர் ஜிநைன் அனீஸ் உட்பட அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றார். சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு ராணுவ வீரர்கள் பின் வாங்கினர். ராணுவ டாங்கிகளும் அங்கிருந்து சென்றன. இந்த சம்பவத்திற்கு பின் சிறிது நேரத்தில் ராணுவ தளபதி ஜோனை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து ஆட்சி கவிழ்ப்பு சதி முறியெடுக்கப்பட்டது. இது குறித்து அதிபர் கூறுகையில், பொலிவியன் ராணுவத்தின் சில பிரிவுகளால் ஒழுங்கற்ற முறையில் அணி திரட்டப்பட்டதை நாங்கள் கண்டிக்கிறோம் என்றார். ராணுவ தளபதி மற்றும் அவருக்கு உடந்தையானவர்களுக்கு எதிராக கிரிமினல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு பிரேசில், பெரு, சிலி, மெக்சிகோ, அமெரிக்கா போன்ற நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu