சென்னை தலைமை செயலகத்திற்கு இன்று காலை திடீரென வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் தலைமைச் செயலகம் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தலைமை செயலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காலை 7.30 மணி அளவில் தனியார் தொலைக்காட்சிக்கு
வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு வந்துள்ளது. இதனை தொடர்ந்து தலைமைச் செயலகம் முழுவதும் உள்ள முக்கிய அறைகளில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.